Published : 11 Jul 2021 03:15 AM
Last Updated : 11 Jul 2021 03:15 AM

கால்நடைத்துறையில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை மற்றும் மாணவர் விடுதி கட்டிடங்கள் கட்டும் பணியை கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

தமிழகத்தில் கால்நடைத்துறையில் உள்ள காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.13 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் மாணவர் விடுதி கட்டிடங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைப் பது தொடர்பாக பட்ஜெட்டில் அறி விக்கப்படும். கால்நடை துறையில் காலிப்பணியிடங்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் காலியிடங்கள் நிரப்பப்படும். ஆடுகளுக்கு ஆட்டம்மை நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடி க்கை எடுத்து வருகிறோம்.

இதற் காக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி எம்பி ஞானதிரவியம், எம்எல்ஏக்கள் அப்துல்வகாப், நயினார் நாகேந் திரன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் கா.நா. செல்வகுமார், பதிவாளர் டென்சிங் ஞானராஜ், கல்லூரி முதல்வர் ஆ. பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ..

நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநெல்வேலி தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார்நாகேந்திரன், தனது தொகுதிக்கு உட்பட்ட பள்ளமடை பகுதியில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினார்.

இதை தொடர்ந்து அமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் சால்வை அணிவித்தார். அப்போது, அவர், ‘‘இது அட்வான்ஸ் பொன்னாடை’’ என்று கூறினார். உடனே அமைச்சர், ‘‘புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ, தெரியாதவன் தெரிஞ்சுக்கோ’’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். அமைச்சரும், பாஜக எம்எல்வும் இவ்வாறு பேசிக்கொண்டதில் அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக திமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x