

கள்ளக்குறிச்சி அருகே எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர் பாக கல்லூரி தாளாளர் வாசுகி, அவரது மகன் ஸ்வாகத் வர்மா, முதல்வர் கலாநிதி மற்றும் பெரு.வெங்கடேசன் ஆகியோ ரிடம் சிபிசிஐடி போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலில் கல்லூரி தாளார் வாசுகியை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்திய போலீ ஸார், அவரைத் தொடர்ந்து அவரது மகன் ஸ்வாகத் வர்மா, முதல்வர் கலாநிதி மற்றும் பெரு. வெங்கடேசன் ஆகியோரையும் சிபிசிஐடி காவல் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், விழுப்புரத்தில் ரகசிய இடத்தில் வைத்து விசா ரணை நடத்தும் சிபிசிஐடி போலீ ஸார், 4 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட தொகைகள் குறித்து விசாரணை நடைபெறுவதாக கூறப் படுகிறது. மேலும், கல்லூரி விடுதி நடத்துவதற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட் டுள்ளதா எனவும், பெரு.வெங்கடேசனுக்கும் கல்லூரிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.