

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 6 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இன்று (ஜூலை 10) உத்தரவிட்டுள்ளார்.
இதில், வாலாஜா சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஆனந்தன், வாலாஜா வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் கலவை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி, வாலாஜா சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், கலவை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ஆற்காடு வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், அரக்கோணம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த நேர்முக உதவியாளர் குமரவேல், ராணிப்பேட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.