

தமிழக வெள்ள பாதிப்புகள் தொடர்பாக, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் எந்த ஒரு அறிக்கையும் வெளியிட வில்லை, அரசின் நடவடிக்கை கள் அனைவராலும் பாராட்டப் பட்டுள்ளது என தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வெள்ள பாதிப்பு களின் போது மாநில அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்த தாக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அறிக்கை வெளியிட் டுள்ளதாக கடந்த 2-ம் தேதி செய்திகள் வெளியாகி இருந்தன. அதில், ‘‘வெள்ளப்பெருக்கு என்பது, அதிகப்படியான மழை யால் மட்டும் ஏற்படவில்லை. மோசமான கழிவுநீர் வெளியேற் றும் அமைப்புகள் மற்றும் நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்ததால் தான் ஏற்பட்டது. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால், இதை தவிர்த் திருக்கலாம்’’ என்று அறிக்கையில் கூறப்பட்டதாக அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது.
இந்த தகவல் முற்றிலும் அடிப்படையில்லாததும், தவ றானதுமாகும். இது தொடர்பாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்திடம் இருந்து தமிழக அரசு விளக்கம் கேட்டது. இதையடுத்து, 3-ம் தேதி (நேற்று முன்தினம்) மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தனது விளக்கத்தை அளித்தது.
அதில், தமிழக வெள்ள பாதிப்புகள் தொடர்பாக இது போன்ற அறிக்கை எதையும் தயாரிக்கவில்லை என்றும் கூறியுள்ளது. ஏற்கெனவே கடந்த டிசம்பர் 13-ம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில், 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் அரிதிலும் அரிதான இயற்கை பேரழிவு என்றும், நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்ற மேலாண்மையில் ஏற்பட்ட தவறு காரணமாக நடக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தேன்.
அதே நேரம், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எதிர்பாராத அளவு பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளின் போது, தமிழக அரசு கையாண்ட மீட்பு, நிவாரணம், மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை அனைவரும் அங்கீகரித்து பாராட்டியுள்ளனர்.
இவ்வாறு தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.