

ஏசி பேருந்துகளுக்கு அனுமதிவழங்கப்படாததால் 3,500 பேருந்துகள் இன்னும் இயக்கப்படவில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்துஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கில் தளர்வுஅளிக்கப்பட்டு ஏசி அல்லாத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், படுக்கை மற்றும் ஏசி வசதியுள்ள 3,500 பேருந்துகள் இன்னும் இயக்கப்படவில்லை. கரோனா அச்சத்தால் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
மற்றொருபுறம் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவையும் தொடங்காததால், ஆம்னி பேருந்துகள் இன்னும் முழு அளவில் இயக்கப்படவில்லை’’ என்றார்.