

‘தி இந்து’ வெல்னஸ் சீரிஸில், ‘டிரான்ஸ்கதேட்டர் அரோடிக் வால்வ் இம்ப்லான்டேஷன்’ தொடர்பான இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அப்போலோ மருத்துவமனை வழங்கியது.
இதில் அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதயநோய் மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு கூறியதாவது:
நவீன மருத்துவத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக டிரான்ஸ்கதேட்டர் அரோடிக் வால்வ்இம்ப்லான்டே ஷன்(டிஏவிஐ) (Transcatheter Arotic ValveImplantation) முறை விளங்குகிறது. இம்முறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை எளிமையாகி, சிகிச்சை முடிந்த மறுநாளே வீடு திரும்புவது சாத்தியமாகியுள்ளது.
அரோடிக் வால்வ் என்பது இதயத்தின் இடப்பக்கம் மற்றும் முக்கிய ரத்தக் குழாயான அரோட்டா இடையே அமைந்துள்ளது. ரத்தம் இந்தவால்வ் வழியே தொடர்ந்துசென்றுவர வேண்டும். ரத்தம் பாய்ந்தவுடன் ஆரோக்கியமான வால்வ் இறுக மூடிக்கொள்கிறது. ஆனால், வயோதிகம் மற்றும் பாதிப்பு காரணமாக சிலருக்கு இந்தவால்வ் சுருங்குகிறது. ஆரம்பகட்டத்தில் இதற்கான எந்தஅறிகுறியும் தெரிவதில்லை. இதற்கு சிகிச்சை அளிக்காமல் இருந்தால், இதய தசைசெயலிழக்கலாம். முன்பெல்லாம் இதற்கு ஓபன் ஹார்ட்சர்ஜரிதான் ஒரே தீர்வு. அப்போது நோயாளி குணமடைய 4 வாரங்கள் ஆகும்.
தற்போது எளிமையான டிரான்ஸ்கதேட்டர் மூலம்வால்வை மாற்றும் செயல்முறை நடைமுறையில் உள்ளது. அப்போலோவில் இந்தசெயல்முறை 2015-ல் நிகழ்த்தப்பட்டது. அறுவை சிகிச்சைசெய்துகொள்ள முடியாதவர்கள், ஏற்கெனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு டிரான்ஸ்கதேட்டர் சிகிச்சை பயன்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். l