‘தி இந்து - யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

‘தி இந்து - யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
Updated on
1 min read

‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் இணைப்பிதழான ‘யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, பாண்டிச்சேரி உட்பட நாடு முழுவதும் 21 நகரங் களில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

இதில் ‘ஜூனியர்ஸ்’ பிரிவில் 4, 5, 6-ம் வகுப்பு மாணவர்களும், ‘சீனி யர்ஸ்’ பிரிவில் 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்களும் பங்கேற்கலாம்.

கலந்துகொள்வது எப்படி?

>www.thehindu.com/ywpainting இணையதளத்தில் உங்கள் பெயரை பதிவு செய்யவேண்டும். பின்னர், பதிவெண் உங்கள் இமெயிலுக்கு அனுப்பப்படும். அந்த பதிவெண்ணை, படம் வரையும் தாளின் வலதுபக்க மேல் மூலையில் நன்கு தெளிவாக குறிப்பிட வேண்டும். படம் வரைந்த தாளின் பின்பக்கம் உங்கள் பெயர், வகுப்பு, பள்ளி, வீட்டு முகவரி, தொடர்புக்கான செல்போன் எண், தனிப்பட்ட மற்றும் பள்ளியின் இமெயில் முகவரி ஆகியவற்றை தவறாமல் எழுதவேண்டும். இந்த தகவல்கள் இல்லாத ஓவி யங்கள் ஏற்கப்படாது. இது நீங் களே வரைந்த படம் என்பதை உறுதிசெய்ய உங்கள் பள்ளி முதல்வர்/ தலைமை ஆசிரியர் அல்லது ஓவிய ஆசிரியரிடம் ஒப்பு தல் கையெழுத்து பெற்று, மேற் கண்ட ஊர்களில் உள்ள ‘தி இந்து’ அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஓவியங்கள் 2016 பிப்ரவரி 27-ம் தேதிக்குள் வந்துசேர வேண்டும்.

ஒரு ஓவியத்தை மட்டும் அனுப்ப கட்டணம் கிடையாது. மேற் கொண்டு ஓவியங்கள் அனுப்ப, ஒரு ஓவியத்துக்கு ரூ.100 கட்டணம். ‘தி இந்து’ அலுவலகத்தில் இதை பணமாக அல்லது காசோலையாக செலுத்தலாம்.

இறுதிப்போட்டி மார்ச் 12 அல்லது 13-ம் தேதி நடத்தப்படும். இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும். அவர் கள் அந்த கடிதத்துடன் தங்கள் சொந்த செலவில் வந்து இறுதிப் போட்டியில் பங்கேற்க வேண்டும். இறுதிப் போட்டிக்கான தலைப்பு கள், போட்டி நடக்கும்போது அறி விக்கப்படும்.

நடுவர்கள் தீர்ப்பே இறுதி யானது. முதல்கட்ட போட்டியில் எந்த தலைப்புகளில் ஓவியம் வரைவது, இதர விதிமுறைகள் போன்ற விவரங்களை >www.thehindu.com/ywpainting இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in