சட்டவிரோத கழிவுநீர் இணைப்பை தடுக்க புதிய சட்ட வரைவு தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு: விசாரணை மார்ச் 7-க்கு ஒத்திவைப்பு

சட்டவிரோத கழிவுநீர் இணைப்பை தடுக்க புதிய சட்ட வரைவு தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு: விசாரணை மார்ச் 7-க்கு ஒத்திவைப்பு
Updated on
1 min read

சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு அதிக அபராதத் தொகை விதிக்கும் வகையில் புதிய சட்டவரைவு அறிக் கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

‘சேஞ்ச் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் கழிவுகளை மனித கைகளால் அள்ளுவதை தடை செய்ய வேண் டும். மனிதர்களைக் கொண்டு அடைப்புகளை சரிசெய்வதை தடை செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.

மாநகராட்சி பதில் மனு

இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற் றல் துறை சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், கழிவுநீர் அடைப்பு களை சரிசெய்ய ரூ.12 லட்சத்தில் புதிய இயந்திரங்கள் வாங்கப்பட் டுள்ளன. சென்னையில் 7,720 கட்டி டங்களுக்கு சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசார ணைக்கு வந்தபோது, சட்டவிரோத இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படு கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது ரூ.100 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது என அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

அபராதத்தை உயர்த்த வேண்டும்

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘‘அபராதத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து லட்சக் கணக்கில் இருந்தால்தான் இது போன்ற செயலை மீண்டும் செய்ய மாட்டார்கள். எனவே, அபராதத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தர விட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.மாலா ஆகி யோர் முன்பு மீண்டும் விசார ணைக்கு வந்தது.

அப்போது, ‘‘சட்ட விரோத கழிவுநீர் இணைப்பு வைத்துள்ள வர்களுக்கு அபராதத் தொகையை அதிகரிப்பது குறித்த புதிய சட்டவரைவை விரைவில் தயாரித்து அதுகுறித்த அறிக் கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி கள், விசாரணையை மார்ச் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in