எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு அனுமதி விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி பாமக ஆர்ப்பாட்டம்
எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி அனுமதி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பாமக சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்த 3 மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இவர் களது மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி அனுமதி தொடர்பாக சிபிஐ விசா ரணை கோரி பாமக சார்பில் வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன் னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தலைமை தாங்கினார். மாணவிகள் மரணம் தொடர்பாக வும், கல்லூரிக்கு அனுமதி வழங் கியது தொடர்பான உண்மையை வெளிக்கொண்டுவரவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற் றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
