

திருநெல்வேலியில் தாமிர பரணி ஆற்றங் கரையில் அபாயகரமான மருத்துவக் கழிவுகள் கொட்டப் படுவது குறித்து இந்து தமிழ் நாளிதழில் புகைப்படங்களுடன் செய்தி வெளி யிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவக் கழிவு களை கொட்டிய தனியார் மருத்துவ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் நடவடிக்கை எடுத்து ள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாமிரபரணி ஆற்றங்கரையோ ரம் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியது குறித்து மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார ஆய் வாளர் பெருமாள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் பொருட்டு ஆற்றங்கரையோரம் மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.