அதிக எண்ணிக்கையில் மகளிரைக் கொண்ட மத்திய அமைச்சரவை: தமிழிசை வாழ்த்து

தமிழிசை சவுந்தரராஜன்: கோப்புப்படம்
தமிழிசை சவுந்தரராஜன்: கோப்புப்படம்
Updated on
1 min read

அதிக எண்ணிக்கையில் மகளிரை உள்ளடக்கிய மத்திய அமைச்சரவை மக்கள் பணியில் வெற்றிகரமாக செயலாற்றும் எனவும், குறிப்பாக தமிழகத்தில் இருந்து பொறுப்பேற்ற எல்.முருகனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று (ஜூலை 08) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான வழிகாட்டுதலின்படி, மத்திய அமைச்சர்களாக புதிதாகப் பதவியேற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நம் பாரதத் திருநாடு, உலக அரங்கில் பீடுநடை போடுவதற்கும் நம் தாய்த் திருநாட்டின் பெருமையை உயர்த்துவதற்கும் நம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் ஒவ்வொரு கடைகோடி இந்தியருக்கும் கிடைப்பதற்கும் இந்த அமைச்சரவை செயலாற்றும் என்பது உறுதி.

அனைத்து தரப்பினரையும், அதிக எண்ணிக்கையில் மகளிரையும் உள்ளடக்கிய இந்த அமைச்சரவை மக்கள் பணியில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் பணி இந்திய நாட்டுக்கும், தமிழ் மக்களின் வாழ்வு சிறக்கவும் அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்".

இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in