Published : 08 Jul 2021 03:12 am

Updated : 08 Jul 2021 06:27 am

 

Published : 08 Jul 2021 03:12 AM
Last Updated : 08 Jul 2021 06:27 AM

கடந்த 6 மாதத்தில் 2,090 பேருக்கு பாதிப்பு- டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்

dengue-fever

சென்னை

இந்தியாவில் 6 மாதங்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் 2,090 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் எடுத்து வரு கின்றன. இதற்கிடையே, ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.


கடந்த ஜன.1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை 6 மாத காலத்தில் இந்தியா முழுவதும் 6,837 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 2,090 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 904, ஜார்கண்டில் 903, ராஜஸ்தானில் 826, மகாராஷ்டிராவில் 530, ஆந்திராவில் 461 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கரோனாவுடன் சேர்த்து டெங்குதடுப்பு பணிகளில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கரோனாவுக்கும் டெங்குவுக்கு ஏறத்தாழ ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் சிரமம்உள்ளது. பருவமழை தொடங்க இருப்பதால் சாலைகள், தெருக்கள்உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்குவுக்கு சிகிச்சைஅளிக்க தேவையான மருந்துகள் அரசிடம் உள்ளது. டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயின்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீர் போன்றவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகக் கூடும். அதனால், அந்த பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தமான தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது” என்றனர்.

எம்எல்ஏ எழிலனுக்கு டெங்கு

இதற்கிடையே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ மருத்துவர் எழிலன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


டெங்கு காய்ச்சல்தமிழகம் முதலிடம்Dengue feverடெங்குமத்திய சுகாதாரத் துறை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x