Published : 08 Jul 2021 03:13 am

Updated : 08 Jul 2021 09:26 am

 

Published : 08 Jul 2021 03:13 AM
Last Updated : 08 Jul 2021 09:26 AM

பெட்ரோல், டீசலுக்கான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

tax-on-petrol-and-diesel

பொள்ளாச்சி

தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. பாஜகவின் தேசிய மகளிர் அணியின் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வழங்குகிறது. மாநில அரசுகள் மத்திய அரசை விட அதிகமாக வரியை விதித்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கின்றன. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. ஜிஎஸ்டியில் இவற்றை கொண்டு வந்தால் விலை குறையும். ஒடிசா போன்ற மாநிலங்களில் வரி குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்கவேண்டும். தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை செயல்படுத்தவும் பொள்ளாச்சியை தலைமையிடமாகக்கொண்டு தனி மாவட்டம் அமைக்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


பெட்ரோல்டீசல்வரிதமிழக அரசுவானதி சீனிவாசன்எம்எல்ஏDieselPetrolTax

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x