

கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈஷா சார்பில் 300 உயர் தர வெண்டிலேட்டர் மற்றும் 18 லட்சம் கே.என். 95 முகக் கவசங்கள் திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினிடம் சென்னையில் நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. தமிழக அரசு மேற்கொண்டுவரும் கரோனா தடுப்பு பணிகளுக்கு ஆதரவு அளித்து உறுதுணையாக செயல்படும் விதமாக இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தனது ட்விட்டர் பதிவில், ‘கரோனா தடுப்பு பணிகளுக்காக, 300 வெண்டிலேட்டர் மற்றும் 18 லட்சம் கே.என்.-95 முகக்கவசங்களை ஈஷா அவுட்ரீச் கோவிட் ஆக் ஷன் சார்பில் நட்சத்திரா, தினேஷ் ராஜா ஆகியோர் என்னிடம் வழங்கினர். நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.