வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று 2-வது சிறப்பு முகாம்: தமிழகம் முழுவதும் 65,616 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய  இன்று  2-வது  சிறப்பு முகாம்: தமிழகம் முழுவதும் 65,616 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது
Updated on
1 min read

வாக்காளர் இறுதிப் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரத்து 616 வாக்குச் சாவடிகளில் இன்று நடக்கிறது.

தமிழகத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியல் ஜனவரி 20-ம் தேதி வெளியானது. இதில் போலி வாக்காளர்கள் அதிக அளவில் இடம்பெற்றிருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. தங்கள் பெயர்கள் இன்னும் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றும், பெயர்கள் நீக்கப் பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பிலும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் 2 சிறப்பு முகாம்கள் நடத்தி, விடுபட்டவர்களின் பெயர்களை சேர்க்கவும், இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும், முகவரி மாற்றங்களை உறுதிப்படுத்தவும் தேர்தல் ஆணையம் உத்தர விட்டது.

இதன்பேரில், தமிழகத்தில் உள்ள 65 ஆயிரத்து 616 வாக்குச் சாவடிகளிலும் முதலாவது சிறப்பு முகாம் கடந்த ஜனவரி 31-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் மனு அளித்தனர். பெயர் சேர்க்க மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி 2-ம்கட்ட மற்றும் இறுதி சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது. பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்டவற்றை இந்த முகாமில் மேற்கொள்ளலாம். இந்த முகாமில் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மாவட்டம்தோறும் உள்ள பொது சேவை மையங்களில் ரூ.10 கட்டணம் செலுத்தி விண்ணப்பங் களை அளிக்கலாம். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை தாலுகா அலுவலகங்கள், மாந கராட்சி மண்டல அலுவலகங் களில் உள்ள பொதுச் சேவை மையங்களில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

முகாம் குறித்து தேர்தல் துறை அதிகாரிகள் மேலும் கூறும்போது, ‘‘இந்த முகாமில் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயர் சேர்க்க மனு அளித்தால் சில ஆவணங்களை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர் இதற்கு முன்பு வேறு முகவரியில் இருந்தால் அதற்கான ஆவணம், ஏற்கெனவே வாக்காளர் பட்டி யலில் பெயர் இருந்தால் வாக் காளர் அடையாள அட்டை ஆகிய வற்றை அளிக்க வேண்டும். ஏற்கெனவே பெயர் சேர்க்கா விட்டாலும்கூட, வேறு முகவரியில் இருந்து மாறி வந்தவர்கள் முகவரி தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும். இரட்டைப் பதிவுகளை நீக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in