

திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் தங்கிவிட்டு நேற்று மாலை சென்னை புறப்பட்டுச் சென்றார். அவருக்கு கடலூர் மாவட்ட எல்லை பகுதியான சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றுபாலம் அரு கில் திமுக சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தொழில்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், சிதம்பரம் சார்-ஆட்சியர் மதுபாலன், நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன், குமராட்சி ஒன்றிய திமுகசெயலாளர்கள் சங்கர், ராஜேந்தி ரன், நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், முன்னாள் சிதம்பரம் நகராட்சி கவுன்சிலர் அப்பு சந்திரசேகர், வல்லம்படுகை மஞ்சு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர்.
பொதுமக்கள் அப்போது மனுக்களை முதல்வரிடம் வழங்கினர்.கடலூரில் எம்எல்ஏ ஐயப்பன் தலைமையில் வரவேற்று அளிக்கப்பட்டது. நகர செயலாளர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ இளபுகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுவையில் வரவேற்பு
தொடர்ந்து புதுச்சேரி வழியாக சென்னை சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, புதுச்சேரியில் மாநில திமுக அமைப்பாளர்களான சிவா எம்எல்ஏ, எஸ்.பி.சிவக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் விழுப்புரம் மாவட்டச் செயலர் புகழேந்தி எம்எல்ஏ, மாநில மருத்துவரணி இணை செயலர் லட்சுமணன் எம்எல்ஏ, மாநில விவசாய அணி துணை செயலர் அன்னியூர் சிவா உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் வரவேற்றனர்.
சிறிது நேரம் உணவகத்தில் ஓய்வெடுத்த முதல்வர் மு.க.ஸ்டா லின் உள்ளிட்டோர் சென்னை புறப்பட்டுச் சென்றனர்.