

கூட்டுறவுத் துறையில் பணியின் போது இறந்த பணியாளரின் வாரிசுக்குப் பணி நியமன ஆணை யை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்த லகுண்டு அருகே தும்மலக்குண்டு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி யில் பணிபுரிந்த சிவமுருகன் 2018-ல் ஒரு விபத்தில் இறந்தார். இவரது மகள் தனுசுயாவுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், கூட்டுறவுத் துறையில் பணியின்போது இறந்தோரின் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆதரவை இழந்த குடும்பத்தினர் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்க முடியும், என்றார். நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.