ஜூலை 3-ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்

ஜூலை 3-ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்
Updated on
1 min read

திமுக சார்பில் மாநிலங்க ளவை உறுப்பினராக இருந்த டி.எம்.செல்வகணபதிக்கு சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால். அவரது பதவி பறிக்கப்பட்டது.

அந்த இடத்துக்கும் ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸைச் சேர்ந்த ஜனார் தன் ரெட்டி காலமானதால் ஏற்பட்ட காலியிடத்திற்கும், ஒடிஷாவில் சசி பூஷண் பெஹரா, ரவிநாராயண் மொஹபத்ரா ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் ஏற்பட்ட காலியிடங்களிலும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணைய இயக்குநர் திரேந்தர் ஓஜா வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு: இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை ஜூன் 16-ல் வெளியிடப்படும்.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 23. மனுக்கள் ஜூன் 24-ல் பரி சீலனை செய்யப்படும். வாபஸ் வாங்க கடைசி நாள் ஜூன் 26. வாக்குப்பதிவு ஜூலை 3-ம் தேதி நடைபெறும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in