திருவாரூர் மாவட்டம் செருமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் செருமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர்.
திருவாரூர் மாவட்டம் செருமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூர் மாவட்டத்துக்கு வருகை தந்தார்.
அவரை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி.ராஜா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், செருமங்கலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.அப்போது, அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதையடுத்து, திருவாரூர் அருகே காட்டூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், காட்டூரில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும் கலைஞர் அருங்காட்சியகம் வாயிலில் கூடியிருந்த பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள வீட்டுக்குச் சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் திருவாரூர் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். முதல்வர் ஸ்டாலினுடன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
இன்று (ஜூலை 7) காலை 8.30 மணியளவில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கான கட்டிடத்தை முதல்வர்ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின், திருக்குவளை செல்லும் அவர், அங்கிருந்து திருவெண்காடு சென்று, பின்னர், சென்னைபுறப்படுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in