மகாமகப் பெருவிழா: நாளை மகாமக தீர்த்தவாரி

மகாமகப் பெருவிழா: நாளை மகாமக தீர்த்தவாரி
Updated on
1 min read

மகாமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரித் திருவிழா நாளை (பிப்ரவரி 22) நடைபெறவுள்ளது. தீர்த்தவாரி நாளன்று 5 லட்சம் பக்தர்கள் மகாமகக் குளத்தில் நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்த்தவாரி நடைபெறவுள்ள மகாமகக் குளத்தில் நாளை (பிப்ரவரி 22) பகல் 12 மணி முதல் நீராட பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், குளத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையெனில் கொஞ்சம் கொஞ் சமாக பக்தர்களை குளத்தில் இறங்க அனுமதிப்பதென போலீஸார் திட்டமிட்டுள்ளனர். பக்தர்கள் அதிகளவு குவிவதைக் கட்டுப்படுத்த, நகரின் பல்வேறு இடங்களில் 28 இரும்பு கேட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

மகாமகக் குளத்தில் சாதார ணமாக 48 ஆயிரம் முதல் 65 ஆயிரம் பக்தர்கள் வரை நீராடலாம், மிக அதிகபட்சமாக 72 ஆயிரம் பேர் வரை அனுமதிக்க முடியும் என போலீஸார் கணக்கிட்டுள்ளனர். இதனடிப்படையிலேயே பக்தர்கள் குளத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கும்பகோணத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிவாலயங்களில் கொடியேற் றம் நடைபெற்ற பிப்ரவரி 13-ம் தேதியிலிருந்தே பக்தர்கள் மகாமகக் குளத்தில் நீராட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் கடந்த இரு தினங்களாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை வரை 25 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in