நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி கூட்டாளிகளுக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் பிடிவாரண்ட்

நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி கூட்டாளிகளுக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் பிடிவாரண்ட்
Updated on
1 min read

மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி யின் கூட்டாளிகள் 12 பேருக்கு மீண்டும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 12 பேரையும் மார்ச் 11-ம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரையில் உள்ள ஒரு நாளி தழ் அலுவலகம் மீது 2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வினோத், கோபிநாத், முத்துராம லிங்கம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை சிபிஐ கைது செய்தது. இவர்களை 2009-ல் விடுதலை செய்து மதுரை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

குண்டு வீச்சில் கொல்லப்பட்ட வினோத்தின் தாயார் பூங்கொடி சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணையை இழுத்தடிப்பதற்காக அட்டாக் பாண் டியின் கூட்டாளிகள் திருச்செல்வம், சரவணமுத்து, முருகன், கந்தசாமி, ரமேஷ்பாண்டி, ரமேஷ்பாண்டியன், வழிவிட்டான், தயாமுத்து, சுதாகர், திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து ஜன.28-ல் உயர் நீதிமன் றம் உத்தரவிட்டது. இருப்பினும் அந்த பிடிவாரண்டை சிபிஐ செயல் படுத்தவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்க லிங்கம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த பிடிவாரண்ட் பிப்.4-ம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்ட தால், அந்த பிடிவாரண்டை திரும்ப ஒப்படைப்பதாகவும், நீதிமன்றம் புதிதாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டு சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட் டது.

அந்த மனுவை ஏற்று, திருச் செல்வம் உட்பட 12 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தும், அவர் களை மார்ச் 11-க்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மனுத்தாக்கல்

திருச்செல்வம், முருகன், சுதாகர் சார்பில் தங்களுக்கு எதிராக பிப்.28-ல் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெறக் கோரி நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in