

சென்னை அருகே அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் சீமான் பேசியதாவது: தமிழ் இனம், தமிழ் மொழியை பற்றி பேசாமல் இன்று தமிழகத்தில் யாரும் அரசியல் செய்யமுடியாது. அதிகாரம் இருந்தால் நாங்கள் மக்களுக்கான ஆட்சியை கொடுப்போம்.
50 ஆண்டுகளில் செய்யாத நல்லவற்றையா கருணாநிதியும், ஜெயலலிதாவும் அடுத்த 5 ஆண்டுகளில் செய்ய போகிறார்கள்?
இப்போதுதான் நம்ம பிரச்சினை என்னவென்றே கேட்கிறார்கள் இவர்கள். ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்துக்கு மக்கள் ஓட்டுப்போட்டால், ஒரு கஷ்டமும் தீராது. ஓட்டுப்போட்ட கைக்கு குஷ்டம்தான் வரும்.
இவ்வாறு சீமான் பேசினார்.