நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடந்தால் மட்டுமே எய்ம்ஸ்-க்கான பூர்வாங்க பணியை தொடங்க முடியும்: மாணிக்கம் தாகூர் எம்பி தகவல்

நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடந்தால் மட்டுமே எய்ம்ஸ்-க்கான பூர்வாங்க பணியை தொடங்க முடியும்: மாணிக்கம் தாகூர் எம்பி தகவல்
Updated on
1 min read

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 17 பேர் கொண்ட நிர்வாகக்குழு கூடி, ஜூலை 16-ம் தேதி ஆலோசிக்க இருப் பதாக விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் கூறினார்.

மதுரை திருநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சுகாதார துறை அமைச்சருக்கு அளித்துள்ள கடிதத்துக்கு பதிலாக ஜூலை 16-ல் எய்ம்ஸ் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் நடை பெற உள்ளது.

ஜிப்மர் மருத்துவமனை இயக் குநரும், எய்ம்ஸ் மருத்துவமனை தலைவருமான கட்டோச்சி தலைமை வகிக்கிறார். மத்திய சுகாதாரத்துறை செயலாளர், இணைச்செயலாளர் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர், மருத்துவ வல்லுநர்கள், விருதுநகர், மதுரை, தேனி எம்பிக்கள் அடங்கிய 17 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டங்கள் புதிய மருத்துவக் கல் லூரிக்கு மாணவர் சேர்க்கை, பூர் வாங்கப் பணிகளை தொடங்கு வது, ஜப்பான் நிறுவனத்தின் முதலீடு குறித்து விரிவாகக் கலந்தாலோசனை செய்ய உள் ளோம். தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தேவையான நிலங்களை மத்திய அரசிடம் அளித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி நிலை ஆதாரங்கள் நாடாளுமன்ற குழுவி டம் வராது. தனிப்பட்ட முறையில் ஜப்பானின் நிறுவனம் மூலம் நிதி ஆதாரங்கள் பெறப்படுவதால் அது குறித்து நிர்வாகக்குழு கூட்டம் முடிந்த பின்புதான் தகவல் தெரிவிக்க முடியும். மேலும் நடப்பு ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கினால் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பூர்வாங்க பணிகள் தொடங்குவதில் அக்கறை செலுத்த முடியும். மாணவர்கள் சேர்க்கையுடன், மாணவர்கள் தங்கும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 10 ஆண்டுகளுக்கு முன்பே விரிவாக்கப் பணி தொடங்கியது. சரியான முறையில் மாநில அரசின் ஒத்துழைப்பின்றி பணிகள் செயல்படவில்லை. தற்போ தைய மாநில அமைச்சர்கள் முன்னெடுத்து 15 நாட்களுக்குள் பணிகளை செயல்படுத்த தீவி ரம் காட்டியுள்ளனர். மதுரை விமான நிலையத்துக்கான இடம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் வாரணாசி, பெங்களூரு போன்று “அண்டர் பாஸ்” முறையில் விமான ஓடுபாதை அமைக்க நட வடிக்கை எடுக்கப்படுகிறது.

எந்த ஒரு பிரச்சினைக்கும் முக்கியக் காரணம் நிலம். அதை மட்டும் உறுதி செய்தால் மதுரை விமான நிலையம் மட்டுமல்ல. எய்ம்ஸ் உள்ளிட்ட எல்லா பிரச்சி னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நிலம் உறுதி செய்யப்பட்ட பின்பு பணி தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in