

ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் தலைமையிடத்து கூடுதல் ஆணையராக இருந்த ஆர்.திருஞானம், திருநெல்வேலி நகர காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு பணியில் இருந்த அருணாச்சலம், சென்னை பெரு நகர காவல் தலைமையிடத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் ஆணைய ராக இருந்த எச்.எம்.ஜெயராம், சென்னை ஆபரேஷன்ஸ் பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜியாக இருந்த அபய் குமார் சிங், சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் ஆணைய ராக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் அபூர்வ வர்மா நேற்று வெளியிட்டார்.