Published : 21 Feb 2016 10:16 AM
Last Updated : 21 Feb 2016 10:16 AM

ஜெயலலிதாவும் கருணாநிதியும் ‘கிரானைட் மோசடிக்கு பதில் கூற வேண்டும்’: ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை

‘2ஜி ஊழலை ஜெயலலிதாவும், சொத்துக்குவிப்பை கருணாநிதியும் விமர்சிக்கின்றனர். ஆனால் இரு வருமே கிரானைட் மோசடியில் பதில் கூற வேண்டியிருக்கும்’ என ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி பிரச் சாரப் பயணம் 3-ம் கட்டமாக கோவை யில் நேற்று தொடங்கியது. சித்தா புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கே.சுப்பராயன் ஆகியோர் பேசினர்.

வைகோ:

சமூகப் பொருளாதார நிலையை ஆய்வு செய்து குறைந்த பட்ச செயல் திட்டத்தை உருவாக்கி யுள்ளோம். இதை நடுநிலையாளர் கள் பாராட்டுகிறார்கள். பெரிய கட்சிகளான திமுகவையும், அதிமுக வையும் எதிர்க்கிறோம். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, 2 கட்சிகளுமே பட்டா போட்டுக் கொடுத்ததுபோல மாறி மாறி ஆட்சியைப் பிடிப்பதை முறியடிப்போம்.

உருவத்தால் நான்கு அமைப்பு களாக இருக்கிறோமே தவிர, சிந்தனை, பேச்சு, நடவடிக்கையில் ஒரே அமைப்பாக உருவாகியிருக்கி றோம். மக்களிடம் எதிர்மறைக் கருத்துகளை உருவாக்கவே கோடிக்கணக்கில் செலவழித்து கருத்துக் கணிப்புகள் நடத்தப்படு கின்றன. எங்கள் மவுனப் புரட்சி நிச்சயம் வெல்லும்.

ஜி.ராமகிருஷ்ணன்:

சகாயம் அறிக்கையில், கிரானைட் முறை கேடு 20 ஆண்டுகளாக நடந்திருப்ப தாகவும், ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் கோடி முறைகேடு செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே அந்த காலகட்டத்தில் ஆட்சி செய்த 2 கட்சிகளுமே இதற்குப் பதில் கூற வேண்டும். லோக் ஆயுக்தா, ஊழல் சொத்துகள் பறி முதல், 5 ஆண்டில் முடக்கப்பட்ட 30 ஆயிரம் தொழில்களை மீட்டெடுப்பது, மது ஒழிப்பு உள் ளிட்ட திட்டங்களை மக்கள் நல கூட்டணி முன்வைத்துள்ளது. ஆட்சி யமைத்ததும் நிச்சயம் செயல் படுத்துவோம்.

திருமாவளவன்:

மாற்று சக்தி என்ற அங்கீகாரத்தை மக்கள் எங்களுக்கு கொடுத்துள்ளார்கள். தேர்தலுக்குப் பிறகும் இவ்வியக்கம் இணைந்தே இருக்கும். 1967-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் போல 2016-ல் ஒரு மாற்றம் ஏற்பட இருக்கிறது. அன்று அண்ணா வுக்கு கைகொடுத்த கம்யூனிஸ்ட் கள், இன்று வைகோவுடன் இணைந்துள்ளனர்.

கே.சுப்பராயன்:

அண்ணாவுக்கு பிறகு வந்த ஆட்சிகளால் என்ன விளைவுகள் நடந்துள்ளது? மாற்றுக் கொள்கைகளை உங்கள் முன் வைத்துள்ளோம். கும்பல் கலாச்சாரத்தை மாற்றி கூர்மை கலாச்சாரத்தை வலியுறுத்த வேண்டும். கொள்கை ரீதியான சிந்தனைகளை முன்வைத்து தேர்தலை சந்திக்கிறது மக்கள் நல கூட்டணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x