தடையை மீறி செல்போனில் பேசியபடி பேருந்து ஓட்டும் அரசு ஓட்டுநர்கள்: நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்

தடையை மீறி செல்போனில் பேசியபடி பேருந்து ஓட்டும் அரசு ஓட்டுநர்கள்: நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்
Updated on
1 min read

அரசின் தடையை மீறி செல் போனில் பேசிக் கொண்டே பேருந் துகளை ஓட்டுநர்கள் இயக்குவ தால் பயணிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே முக்கிய காரணமாக உள்ளது. எனவே, அரசுப் பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி செல்போன் பேசிக் கொண்டு பேருந்துகளை ஓட்டிச் செல்ல ஓட்டுநர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை ஆரம்பத்தில் போக்குவரத்துத் துறை கடுமையாக்கியது. ஓட்டுநர் கள் பணிக்கு செல்லும்போது செல்போன்களை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், இப்போது அந்த தடையை யாரும் கண்டுகொள்ள வில்லை. பல ஓட்டுநர்கள், தாராளமாக செல்போனில் பேசிய படியே பேருந்துகளை ஓட்டிச் செல்கின்றனர். இது, பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. இப்படிப்பட்ட ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பாக போக்கு வரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர் மீது பயணிகள் புகார் அளிக்கலாம். அதற்காக பேருந்துகளில் செல்போன் எண்ணை எழுதி வைத்துள்ளோம். புகார் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது சஸ் பெண்ட் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 94450 30516, 93833 37639 ஆகிய 2 செல்போன் எண்களில் புகார் அளிக்கலாம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in