

கும்பகோணத்தில் நடைபெற்று வரும் மகாமகப் பெருவிழாவின் ஒரு பகுதியாக 4 மகாமகங் களுக்குப் பிறகு, ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெரு விழா ஆதிகும்பேஸ்வரர் கோயில் கொடியேற்றத்துக்குப் பிறகுதான் தொடங்கப்படுகிறது. அந்த வகையில் மகாமகப் பெருவிழாவுக்கும், கும்பகோணம் நகரின் பெயருக்கும் காரணமா னதாக இந்த கோயில் போற்றப் படுகிறது.
மகாமகப் பெருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் பஞ்சமூர் த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 8 மணியளவில் கும்பேஸ்வரர் தேரும், அதைத் தொடர்ந்து மங்களாம்பிகை அம்பாள் தேரும் வடம் பிடிக்கப் பட்டன. இதற்கென வண்ணத் துணிகளைக் கொண்டு அனைத்துத் தேர்களும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அனைத்துத் தேர்களும் நிலையடியிலிருந்து புறப்பட்டு, கோயில் வீதிகளை வலம் வந்து மீண்டும் நிலையடியில் நிறுத்தப்பட்டன.
இந்த விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
இரவு 7 மணிக்கு சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி ஏராள மான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந் தனர்.
பல்வேறு காரணங்களால்...
கடந்த 1968-ம் ஆண்டு நடைபெற்ற மகாமகப் பெருவிழாவின்போது ஆதிகும் பேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. அதன்பிறகு ஆண்டுதோறும் மாசிமகத்தன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. 1980, 1992 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மகாமகப் பெரு விழாக்களின்போது பல்வேறு காரணங்களால் இந்த தேரோட் டம் நடைபெறவில்லை. 48 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெறும் மகாமகப் பெருவிழாவில்தான் தேரோட்டம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.