

‘அம்மா’ சிறு வணிக கடனுக்கான சிறப்பு முகாம்கள் இன்றுடன் முடி கிறது. முதல்வர் அறிவித்த 2 லட்சம் பேருக்கு கடன் என்ற இலக் கின்படி விண்ணப்பங்கள் வழங்கப் பட்டுள்ளன.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங் களில் தினமும் பொருட்கள் வாங்கி விற்கும் சிறு வணிகர்கள், பெட்டிக்கடைக்கார்கள் தங்கள் வியாபாரத்தை மீண்டும் தொடங்க வும், கந்துவட்டி பிரச்சினையில் இருந்து அவர்களை மீட்கவும் ‘அம்மா’ சிறு வணிக கடன் திட் டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இத்திட்டத்தின்படி சிறு வணிகர் களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியின்றி ரூ.5 ஆயிரம் கடன் வழங்கப்படும். அத்தொகையை வாரம் ரூ.200 வீதம் 25 வாரங்களில் கட்ட வேண்டும். இத்திட்டத்தை கடந்த 22-ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது, தமிழகம் முழுவதும் 10 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தி, 2 லட்சம் சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கப் படும் என்றும் அறிவித்தார்.
முதல்கட்டமாக 500 சிறப்பு முகாம்கள் என்ற அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற் போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள், பாதிக்கப்பட்ட மாவட் டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டுள்ளது. நேற்று வரை 1 லட்சத்து 92 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங் கள் வணிகர்களுக்கு வழங்கப்பட் டுள்ளன.
இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
‘அம்மா’ சிறு வணிக கடன் திட் டத்தின் கீழ், வங்கிக்கணக்கில்தான் பணம் செலுத்தப்படுகிறது. வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் கடன் தொகை செலுத்தப்படுகிறது. கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கி 8 நாட்களில் (26, 31-ம் தேதிகள் தவிர) 3,891 முகாம்கள் நடத்தப் பட்டு, ஒரு லட்சத்து 84 ஆயி ரத்து 535 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விண் ணப்பங்களை பூர்த்தி செய்து வழங் கியவர்களில் 30,597 வணிகர் களுக்கு ரூ.15 கோடியே 30 லட்சம் அளவுக்கு கடன் தொகை, வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாளை (இன்று) வரை முகாம் நடப்பதால், முதல்வர் அறிவித்த இலக்கு எட்டப்பட்டுவிடும். மேலும், தேவை ஏற்படின் தொடர்ந்து முகாம்கள் நடத்துவது தொடர்பாக அரசு அறிவிக்கும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.