சமுதாய நலக் கூடங்களை இலவசமாக பயன்படுத்தலாம்: மேயர் சைதை துரைசாமி அறிவிப்பு

சமுதாய நலக் கூடங்களை இலவசமாக பயன்படுத்தலாம்: மேயர் சைதை துரைசாமி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியிடம் உள்ள சமுதாய நலக்கூடங்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அவர் அறிவித்ததாவது:

மாநகராட்சியின் சமுதாய நலக்கூடங்கள், பொதுமக்கள் பயன் பாட்டுக்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடியே 32 லட்சம். அந்த சமுதாய நலக்கூடங்கள் இனி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல வசமாக வழங்கப்படும். இதற்கான பராமரிப்பு தொகை மட்டும் பய னாளிகளிடமிருந்து வசூலிக்கப் படும். அந்த தொகை, சம்பந்தப் பட்ட சமுதாய நலக்கூடங்களின் பரா மரிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும்.

இதற்கென சம்பந்தப்பட்ட மண் டல அலுவலகங்களில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, வசூலிக் கப்படும் தொகை வங்கியில் செலுத்தப்படும். முதல்வர் ஜெய லலிதாவின் பிறந்தநாளை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்படு கிறது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in