7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

காற்றின் திசை வேக மாற்றம், வெப்பச் சலனம் காரணமாககோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,தேனி மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் இன்று இடி, மின்னலுடன் கன மழையும், மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

6, 7-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், மற்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in