Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM

‘இந்து தமிழ் திசை’, லிம்ரா நிறுவனம் சார்பில் சிறந்த மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம் விருது’

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், லிம்ரா நிறுவனம் இணைந்து, தமிழகத்தில் சிறப்பான சேவையாற்றும் மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம் விருது’ வழங்கி கவுரவிக்க உள்ளன.

கரோனா போன்ற பெருந்தொற்று பரவல் காலத்திலும் மருத்துவர்கள் தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகின்றனர். அத்தகைய மருத்துவர்களை பாராட்டி சிறப்பிக்கும் விதமாக, ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்துக்கு 5 மருத்துவர்கள் என தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம் விருது’ வழங்கி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சிறப்பிக்க உள்ளது. இந்த நிகழ்வை லிம்ராஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்துடன் இணைந்து நடத்த உள்ளது.

முதல்வர் வாழ்த்து

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் ‘மருத்துவ நட்சத்திரம் விருது’ நிகழ்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மாவட்டம்தோறும் சிறப்பான சேவையாற்றும் மருத்துவர்களை தேர்வு செய்து தரும் பணியை இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (ஐஎம்ஏ) மேற்கொள்கிறது. மருத்துவர்கள் வயதுவாரியாக தேர்வு செய்யப்பட்டு, மாவட்டத்தில் 5 மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம் விருது’ அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வை ‘இந்து தமிழ்திசை’ நாளிதழோடு இணைந்து நடத்தும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் கடந்த 19 ஆண்டுகளாக, வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும்மாணவர்களுக்கு பிலிப்பைன்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் இடத்தைப் பெற்றுவழங்கி வருகிறது. வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு வருபவர்களுக்கான எஃப்எம்ஜி எனப்படும் இந்திய தகுதித் தேர்வுக்கான பயிற்சியையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x