

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: பேருந்து இயங்கும்போது ஒரு கிலோமீட்டருக்கு ரூ.52 வருவாய் கிடைத்தால்தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருவாய், செலவுக்கு சமமாக இருக்கும்.
கரோனாவுக்கு முன்பு ஒரு கி.மீ.க்கு ரூ.30 வரை கிடைத்த நிலையில், தற்போது ரூ.20-ஆக குறைந்துள்ளது. ஒரு கி.மீ. டீசல் செலவு ரூ.12-ல் இருந்து ரூ.14-ஆக அதிகரித்துள்ளது. இதனால், தினசரி டீசல் செலவு கூடுதலாக ரூ.80 லட்சம் அதிகரித்துள்ளது. 2018 ஜனவரிக்குப் பிறகு டீசல் விலை உயரும்போதெல்லாம் அதிகரிக்கும் செலவுத் தொகையை தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக வழங்கி வருகிறது. எனவே, தற்போதும் இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.