Published : 28 Feb 2016 11:02 AM
Last Updated : 28 Feb 2016 11:02 AM

19 ஆண்டுகளாக ஜெயலலிதா வழக்கில் பணியாற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சம்பந்தம் நாளை ஓய்வு: கடைசி வரை வழங்கப்படாத பதவி உயர்வு?

கடந்த 19 ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பணியாற்றி வரும் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் ஜி.சம்பந்தம் நாளை ஓய்வு பெறுகிறார்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜி. சம்பந்தம் கடந்த‌ 27.9.1987 ம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீது ரூ.66 கோடி சொத்துக்குவிப்பு புகார் எழுந்தது.

இதை தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு தலைமையிலான‌ விசாரணை குழு விசாரித்து வந்தது. திமுக ஆட்சியின்போது அமைக்கப்பட்ட இந்த குழுவில் 3.12.1997 அன்று ஜி.சம்பந்தம் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். நல்லம்ம நாயுடுவு டன் இணைந்து சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை, சொத்துகளின் மதிப்பீடு, அரசு சான்று ஆவணங்கள் உள்ளிட்ட பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 2004-ம் ஆண்டு சென்னையில் இருந்து பெங்களூரு வுக்கு மாற்றப்பட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையை கண்காணிக்க ஜி.சம்பந்தம் பெங்களூருவுக்கு அனுப்ப‌ப்பட்டார்.

நீதிமன்றத்தின் அன்றாட நிகழ்வு களையும் வழக்கின் போக்கையும் துல்லியமாக கணித்து, மேலிடத் துக்கு அறிக்கையாக அளிப்பார். இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றி யதால் கடந்த 2007-ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து 2009-ம் ஆண்டு இவருக்கு துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் திமுக, அதிமுக என ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். இந்த வழக்கை நன்கு அறிந்தவர் என்பதால் சம்பந்தம் மட்டும் இரு ஆட்சியிலும் மாற்றப்படாமல் இருந் தார். சொத்துக்குவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை எட்டியபோது, சம்பந்தம் ஜெயலலிதா தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இதனை திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக விமர்சித்திருந்தார்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தை தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்றத் தில் நடந்த மேல்முறையீட்டு வழக் கிலும் சம்பந்தம் தொடர்ந்து ஆஜரா னார்.

இதனால் கடந்த ஜனவரி 26-ம் தேதி இவருக்கு குடியரசுத் தலைவ ரின் ‘மெச்சத்தக்க விருது' வழங்கப் பட்டது.

கடைசி நேர மனவருத்தம்

கடந்த 19 ஆண்டுகளாக சென்னை நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என சொத்துக்குவிப்பு வழக்கில் பணியாற்றிய ஜி. சம்பந்தம் நாளையுடன் பணியில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார். இந்த கடைசிக் கட்டத்தில் சம்பந்தம் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தமிழக நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக பணியாற்றிய நல்லம்ம நாயுடுவுக்கு 7 முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய வி.சி. பெருமாளுக்கு ஒரு முறையும், சவுந்தர் ராஜன், குணசீலன் ஆகியோருக்கு தலா 2 முறையும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடக்கம் முதல் பணியாற்றி வரும் சம்பந்தத்துக்கு கடந்த 7 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

கூடுதல் துணை காவல் கண்காணிப் பாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என பல முறை வலியுறுத் தியும், உள்துறைக்கு 7 முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், ஜி. சம்பந்தம் ஓய்வு பெறுவது தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஏனென்றால் பல லட்சக்கணக்கான ஆவணங்களைக் கொண்ட இந்த வழக் கில், எந்தெந்த ஆவணத்தில் என்ன இருக்கிறது என்பது இவருக்கு மட்டுமே தெரியும். அவர் ஓய்வு பெற்றால், புதிய அதிகாரிகள் இந்த ஆவணங்களைப் படித்து அறிந்து கொள்வது எளிதானது அல்ல. எனவே தமிழக அரசு சம்பந்தத்துக்கு பதவி உயர்வு வழங்கி, பணி நீட்டிப்பும் வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு வலியுறுத்தி உள்ளோம்''என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x