

தமிழில் தொடர்ந்து 36 ஆண்டு களாக வெளியாகிவந்த ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ், தனது வெளி யீட்டை திடீரென நிறுத்திவிட்டது.
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் 1980-ம் ஆண்டு ஜனவரியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டது. முதல் இதழை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் வெளியிட்டார்.
ஒரு லட்சம் பிரதிகள் விற்ற முதல் சினிமா பத்திரிகை என்ற பெருமை இந்த இதழுக்கு உண்டு. இந்த இதழ் சார்பில் தென்னிந்திய திரைக் கலைஞர் களுக்கு ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்’ வழங்கப்பட்டு வந் தன. இந்த விருதை திரையுல கினர் பெருமையாக கருதினர்.
தொடர்ந்து 36 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருந்த இந்த இதழ், திடீரென நிறுத்தப் பட்டுவிட்டது. வெளியீட்டின் நிறுத்தம் குறித்து பிப்ரவரி 16 - 29 இதழ் தலையங்கத்தில், ‘சரியான காரணம் கூறத் தெரிய வில்லை. கனத்த இதயத்தோடு விடைபெறுகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.