Last Updated : 05 Jul, 2021 03:13 AM

 

Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM

58 ஆண்டுகளில் புதுச்சேரியில் இரு பெண் அமைச்சர்களுக்கு மட்டுமே வாய்ப்பு: உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்குமா?

புதுச்சேரியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். ஆனால், சட்டப்பேரவை தேர்த லில் பெண்களுக்கான வாய்ப்பு குறைவுதான். எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலில் முக்கியக் கட்சிகள் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங் கியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெண்களுக்கு குறைந்த அளவே வாய்ப்பளித்து வந்தன. முதல் சட்டப்பேரவையில் (1963-1964)சரஸ்வதி சுப்பையா, சாவித்திரிஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். 2-வது சட்டப்பேரவையில் (1964-68) பத்மினி சந்திர சேகரன்,அங்கம்மாள் தேர்ந்தெடுக்கப்பட் டனர். 3-வது சட்டப் பேரவையில் (1969-74) வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டார். 4 மற்றும் 5-வதுசட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.

6-வது சட்டப்பேரவையில் (1980-83) ரேணுகாஅப்பாதுரை தேர்ந்தெடுக்கப்பட் டார். அவர் அமைச்சராகவும் இருந்தார். 7-வது சட்டப் பேரவையில் (1985-90) கோமளா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சட்டப் பேரவைக்கு செல்வி சுந்தரம் நியமன எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டார். 8-வது சட்டப்பேரவைக்கு பெண் கள் யாரும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 9-வது சட்டப்பேரவைக்கு 1991-ல் கே.பக்கிரி அம்மாளும், 10-வதுசட்டப்பேரவைக்கு 1996-ல் அரசி யும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 11-வது சட்டப்பேரவைக்கு 2001-ல் மேரிதெரசா நியமன எம்எல்ஏவாக இருந்தார். அதன்பிறகு பெண் எம்எல்ஏக்கள் யாரும் இல்லை.

இந்நிலையில் 15 ஆண்டுக ளுக்கு பிறகு கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 1, காங்கிரஸ் 1, என்ஆர் காங்கிரஸ் 2, திமுக 1, பாஜக, பாமக, ஐஜேக என பல்வேறு கட்சிகள் சார்பில் மொத்தம் 12-க்கு மேற்பட்ட பெண்கள் தேர்தலில் போட்டி யிட்டனர். காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட வி.விஜயவேணி, என்ஆர் காங்கிரஸ் சார்பில் திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட்ட கோபிகா, நெடுங்காடு (தனி) தொகுதியில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா, திமுக சார்பில் காரைக்கால் நிரவி தொகுதியில் போட்டியிட்ட கீதா ஆனந்தன் ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 2001-ம் ஆண்டுக்குப் பின் பெண் எம்எல்ஏக்கள் இல்லாத நிலை கடந்த முறை மாறி 4 பெண்கள் வெற்றி பெற்றனர்.

இம்முறை 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்கள் போட்டியிட முக்கியக் கட்சிகள் வாய்ப்பே தரவில்லை.

அதிமுக, திமுக, பாஜகவில் பெண் வேட்பாளர்கள் ஒருவர் கூட இல்லை. காங்கிரஸில் ஒரேயொரு பெண் வேட்பாளராக கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த விஜயவேணிக்கு வாய்ப்பு தரப்பட்டு அவர் தோல்வியடைந்தார். என்ஆர் காங்கிரஸில் கடந்தமுறை வென்ற சந்திர பிரியங்கா போட்டியிட வாய்ப்பு கிடைத்து வெற்றிபெற்று அமைச்சராகியுள்ளார்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், “புதுச்சேரியில் பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப் பதில்லை. பெரிய கட்சிகளே வாய்ப்பு தர தயங்குகின்றன. அந்தநிலை மாற வேண்டும். வாக்காளர்கள் அதிகமிருந்தும் பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராதது தவறு. புதுச்சேரியில் இதுவரை 2 முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. கடைசியாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சி தலைவராக டாக்டர் ஸ்ரீதேவி பதவி வகித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் புதுச் சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தருவது அவசியம்” என்று குறிப்பிட்டனர்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள சந்திர பிரியங்கா கூறுகையில், “வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரிதிநிதித்துவத்தை முதல்வர் ரங்கசாமி வழங்குவார்” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x