விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தொடங்க தீவிர ஏற்பாடு

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தொடங்க தீவிர ஏற்பாடு

Published on

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விருதுநகரில் மாவட்ட விளையாட்டரங்கம் எதிரே உள்ள பெருந்திட்ட வளாகத்தில் 28 ஏக்கர் நிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் சங்குமணி கூறுகை யில், மருத்துவக் கல்லூரியில் கட்டுமானப் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. ஒன்றரை மாதங்களில் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிக்கப்படும். அதோடு, மருத்துவக் கல்லூரியில் 100 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர் சேர்க்கைக்கு விருதுநகர் மருத்துவக் கல்லூரி தயாராக உள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசுக்கும், தேசிய மருத்துவ கவுன்சிலுக்கும், தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்று கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in