

கரூர் நகராட்சி நிகழாண்டிலேயே மாநகராட்சியாக்கப்படும் என மக்கள் சபை நிகழ்ச்சியில் மாநில மின் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூர் நகராட்சி 1-வது வார்டு கோதூர் சாலையில் ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் மக்கள் சபை நேற்று நடைபெற்றது. இதில், மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பேசியது:
தமிழக முதல்வர் சொன்னதை மட்டுமில்லாமல், சொல்லாததை யும் செய்வார். ஜூன் 3-ம் தேதி கரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும் என முதல்வர் கூறிய நிலையில், மே மாதமே முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. ஜூன் 3-ம் தேதி 2-வது தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. இவற்றுடன் அவர் சொல்லாத 14 மளிகைப் பொருள் தொகுப்பையும் வழங்கினார். முதல்வரிடம் பேசி கரூர் நகராட்சி நிகழாண்டிலேயே மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றார்.
தொடர்ந்து, கரூர் நகராட்சி 28-வது வார்டு வேலுசாமிபுரத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, செய்தியாளர் களிடம் கூறியது:
கரூர் நகராட்சியில் உள்ள 43 வார்டுகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. தொடர்ந்து, குளித்தலை நகராட்சி, 11 பேரூ ராட்சிகள், 157 ஊராட்சிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப் படும். கடந்த வாரம் 4,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, அவை துறைவாரியாக பிரிக்கப் பட்டு, நடவடிக்கைக்கு அனுப்பப் பட்டுள்ளன. கைத்தறி, கொசுவலை, பேருந்து கூண்டு கட்டும் தொழி லுக்கு சிறப்பு பெற்ற கரூர் நகராட் சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கரூர் மாவட் டத்துக்கு முதல்வர் வழங்குவார் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப் பிரமணியன், நகராட்சி ஆணை யர் கே.எம்.சுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மேலும் 32 இடங்களில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
ரூ.2.10 லட்சம் தடுப்பூசி
தொடர்ந்து, பல்வேறு தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழி லாளர்களுக்காக கரூர் ஜவுளிப் பூங்காவில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கிவைத்து, அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியது:
கரூர் மாவட்டத்துக்கு இதுவரை 2.10 லட்சம் தடுப்பூசிகள் வரப் பெற்றுள்ளன. இதில் நேற்று (நேற்று முன்தினம்) வரை 2,07,419 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் வரப் பெறும் எண்ணிக்கையின் அடிப் படையில், அனைவருக்கும் விரைந்து தடுப்பூசிகள் செலுத் தப்படும் என்றார்.