Published : 05 Jul 2021 03:15 AM
Last Updated : 05 Jul 2021 03:15 AM

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கர்ப்பிணிகளுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி: பக்க விளைவுகள் ஏற்படாது என துணை இயக்குநர் உறுதி

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கர்ப்பிணிகளுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று தொடங்க இருப்ப தால் கர்ப்பிணிகள் தவறாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசிகள் 30 நாட்கள் கழித்தும், கோவிஷீல்டு தடுப்பூசிகள் 85 நாட்களுக்கு பிறகும் போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா 2-வது அலை பெரிய பாதிப்பை பொதுமக்களிடம் ஏற்படுத்தியதால் தடுப்பூசி மீது இருந்த அச்சத்தை மறந்த பொதுமக்கள் தாமாக முன் வந்து தற்போது தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது.

வேலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இதைத்தொடர்ந்து, இன்று (ஜூலை 5-ம்) திங்கள்கிழமை முதல் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள் ளனர்.

இது குறித்து வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, "வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் இதுவரை 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட் டுள்ளது. தற்போது, கோவிஷீல்டு தடுப்பூசிகள் 5 ஆயிரமும், கோவாக்சின் தடுப்பூசிகள் 5 ஆயிரம் என மொத்தம் 10 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. இது தவிர வேலூர் மாவட்டத்துக்கு விரைவில் தடுப்பூசிகள் வர உள்ளன.

வேலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் பல கட்ட ஆய்வுக்கு பிறகு வந்துள்ளன. எனவே, கர்ப் பிணிகள் தயக்காமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதால் அவர்கள் வழக்கமாக சாப்பிடும் ஊட்டச்சத்து மாத்திரைகள், மருத்துவப் பரிசோதனைகள், உணவு வகைகளை வழக்க மாக எடுத்துக்கொள்ளலாம். தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படாது.

மேலும், தமிழகத்தில் கரோனா 3-வது அலை பரவல் வரும் என உலக சுகாதாரத்துறை எச்சரித்துள் ளதால் அனைத்து கர்ப்பிணிகளும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். வேலூர் மாநகராட்சிப்பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் என 15 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

அதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும். ஆகவே, அந்தப்பகுதிக்கு உட்பட்ட இடங்களில் வசிக்கும் அனைத்து கர்ப்பிணி பெண்களும் தங்களது ஆதார் அட்டையுடன் சென்று கரோனா முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x