சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் காலமானார்: கருணாநிதி இரங்கல்

சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் காலமானார்: கருணாநிதி இரங்கல்
Updated on
1 min read

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் (77) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.

திருச்சியை அடுத்த திருவேங்கிமலையில் 1937-ம் ஆண்டு பிறந்த நடராஜன், பி.காம் பட்டம் பெற்றவர். அரசு ஊழியராக சென்னை தலைமைச் செயலகத்தில் பணியை தொடங்கிய இவர், 1963-ல் திருச்சி வானொலி நிலைய உதவி இயக்குநரானார். பின்னர் கோவை வானொலி நிலைய இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் துணை இயக்குநராக இருந்த இவர், இயக்குநராக பதவி உயர்வு பெற்று 6 ஆண்டுகள் பணியாற்றினார். 1996-ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

பிரபல நாதஸ்வர இசைக் கலைஞர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் மகள் ரமீலாவை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகனும் மாலதி என்ற மகளும் உள்ளனர்.

நடராஜனின் உடல் சென்னை பெருங்குடி டெக்கான் நெஸ்ட் சிபிஐ காலனியில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட் டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது. பெசன்ட்நகர் மின் மயானத் தில் உடல்தகனம் செய்யப்படுகிறது. தொடர்புக்கு 98410 70403.

திமுக தலைவர் கருணாநிதி, தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோர் நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in