

தொழிலாளர் ஆணையராக சி.முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு:
ஆதிதிராவிடர் நலத்துறை முன்னாள் ஆணையர் சி.முனியநாதன், தொழிலாளர் ஆணையராகவும், நில சீர்திருத்தத் துறை முன்னாள் ஆணையர் ஆர்.லில்லி, தொழில்துறை சிறப்பு செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதித் துறை சிறப்பு செயலராக இருந்த பூஜா குல்கர்ணி, ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவன தலைமை செயல் அதிகாரியாகவும், நகர மற்றும் ஊரமைப்பு திட்ட முன்னாள் இயக்குநர் பி.கணேசன், தமிழ்நாடு சாலை பிரிவு திட்ட இயக்குநராகவும், உயர் கல்வித்துறை துணை செயலாளர் எம்.எஸ்.சங்கீதா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக இணை மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.