

சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.சம்பத் படத்துக்கு அஞ்சலி செலுத்திய பின் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நிருபர்க ளிடம் கூறியதாவது:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக வரும் கருத்துக்கணிப்பு கள் அனைத்தும் திட்டமிட்டு அதிமுக வுக்கு சாதகமாக வெளியிடப்படு கின்றன. காங்கிரஸுக்கு 15 சதவீத வாக்கு வங்கி உள்ளது. அது இந்தத் தேர்தலில் முழுமையாக வெளிப் படும். கடந்த 2 ஆண்டு கால மோடி ஆட்சியில் காங்கிரஸின் அருமையை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். செயலற்ற அதிமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, வரும் தேர்தலில் திமுக - காங் கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். காங்கிரஸைப் பொறுத்த வரை தொகுதிகள் முக்கியமல்ல. அதிமுகவை வீழ்த்துவதே காங் கிரஸின் இலக்கு என்றார்.
நேர்காணல் இன்று தொடக்கம்
சட்டப்பேரவைத் தேர்தலில் காங் கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பு பவர்களிடம் இருந்து கடந்த 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அந்தந்த மாவட்டங் களில் இன்றும் நாளையும் நேர்காணல் நடைபெறவுள்ளது. நேர் காணலை நடத்துவதற்காக பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.