

சிவகங்கை மாவட்டத்தில் தனிப் பிரிவு காவல் அதிகாரிகளின் தலை யீட்டால், எஸ்ஐக்கள் இடமாற்றம் முறையாக நடக்கவில்லை என எஸ்ஐக்கள் குமுறி வருகின்றனர்.
காவல்துறையின் செயல்பாட் டில் எக்காரணம் கொண்டும் தலையிடக் கூடாது. காவல் நிலையங்களுக்கு நேரிலோ, மொபைலிலோ பேசக் கூடாது என அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மேலும் நியமனங்கள், பணி மாறுதல்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண் டுமென வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 53 எஸ்ஐக்கள் இடமாற்றம் செய் யப்பட்டுள்ளனர். இந்த இட மாற்றத்தில், மு.க.ஸ்டாலின் எச்சரிக்கையால் ஆளும் கட்சியினர் அழுத்தம் கொடுக்கவில்லை. இருந்தபோதிலும், எஸ்பியின் தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் தலையீட்டால் இடமாற்றம் முறையாக நடக்கவில்லை என எஸ்ஐக்கள் புலம்புகின்றனர்.
ஐம்பது வயதைக் கடந்த பலரை தொலைதூரக் காவல் நிலையங்களுக்கு மாற்றி உள்ளனர். ஒரே இடத்தில் 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் பணிபுரிந்த சிலரையும் மாற்றி உள்ளனர். விரும்பிய இடங்கள் கிடைக்காததாலும், தொலைதூரத் துக்கு இடமாற்றம் செய்ததாலும் எஸ்ஐகள் புலம்பி வருகின்றனர். மேலும் 2 எஸ்ஐகள் மட்டுமே இருந்த சிவகங்கை மாவட்ட தனிப்பிரிவு தலைமை அலுவலகத்தில் தற் போது 4 எஸ்ஐக்கள் உள்ளனர். அது வும் 4 பேரும் நேரடி எஸ்ஐக் களாக உள்ளனர். ஆனால் சாலைக்கிராமம், திருவேகம் பத்தூர், புழுதிப்பட்டி போன்ற மாவட்ட எல்லையில் உள்ள காவல்நிலையங்களிலும், அதிக கிராமங்கள் அடங்கிய திருக் கோஷ்டியூர் போன்ற காவல் நிலை யங்களிலும் நேரடி எஸ்ஐக் களை நியமிக்காமல் பதவி உயர்வு எஸ்ஐக்களே உள்ளனர். இதுபோன்ற சிவகங்கை மாவட்ட காவல்துறையில் உள்ள குளறு படிகளை மாவட்ட எஸ்பி சரி செய்ய வேண்டுமென போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் சிலர் கூறியதாவது: மாவட்ட எஸ்பி புதியவர் என்பதால், தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் தங்களது பதவிகளை பாதுகாத்துக் கொள்ள, எஸ்ஐக்கள் இடமாற்றத்தில் குழப்பம் செய்துள்ளனர். மேலும் தனிப்பிரிவு தலைமை அலு வலகத்தில் உள்ள 4 பேரும் நேரடி எஸ்ஐக்களாக உள்ளனர். இதனால் பல காவல் நிலையங்களில் நேரடி எஸ்ஐக்களே இல்லாதநிலை உள்ளது,’ என்றார்.