தமிழகத்தில் எச்ஐவி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஆண்களிடம் குறைந்தது; பெண்களிடம் அதிகரிப்பு

தமிழகத்தில் எச்ஐவி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஆண்களிடம் குறைந்தது; பெண்களிடம் அதிகரிப்பு
Updated on
2 min read

மத்திய அரசின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஆண்களிடம் குறைந்திருப்பதாகவும், பெண்களி டம் அதிகரித்திருப்பதாகவும் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச் சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு மையம் முதல் கட்டமாக தனியார் நிறுவ னங்கள் மூலமாக தமிழகம் உள் ளிட்ட 15 மாநிலங்களில் கல்வி, சுகாதாரம், சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 2015-16-ம் ஆண்டுக்கான ஆய்வை நடத்தியது. தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி முதல் ஜூன் 26-ம் தேதி வரை 26 ஆயிரத்து 33 குடும்பங்களில் உள்ள 28 ஆயிரத்து 820 பெண்கள், 4 ஆயிரத்து 794 ஆண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வு முடிவுகளின் விவரம்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு களில் 69.4 சதவீதமாக இருந்த படித்த பெண்களின் எண்ணிக்கை தற்போது 79.4 சதவீதமாக அதிகரித் துள்ளது. படித்த ஆண்களின் எண்ணிக்கை 84.1 சதவீதத்தில் இருந்து 89.1 சதவீதமாக அதிகரித் திருக்கிறது. 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை 31.8 சதவீதத்தில் இருந்து 50.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

திருமணம்

பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் செய்வது 21.5 சதவீதத் தில் இருந்து 15.7 சதவீதமாக குறைந் துள்ளது. ஆண்கள் 21 வயதுக்குள் திருமணம் செய்வது 14 சதவீதத் தில் இருந்து 17 சதவீதமாக அதிக ரித்துள்ளது. பெண்கள் 15 வயது முதல் 19 வயதுக்குள் தாயாகவும், கர்ப்பிணியாகவும் இருப்பது 7.7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது.

குழந்தை பிறப்பு

தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பது 87.8 சத வீதத்தில் இருந்து 99 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவ மனைகளில் குழந்தைகள் பிறப்பது 48.1 சதவீதத்தில் இருந்து 66.7 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வீடுகளில் பிரசவம் பார்த்து குழந் தைகள் பிறப்பது 2.9 சதவீதத்தில் இருந்து 0.6 சதவீதமாக குறைந் துள்ளது.

குழந்தை பிறந்து 1 மணி நேரத் தில் இருந்து 3 வயது வரை தாய்ப்பால் கொடுப்பது 55.2 சதவீதத்தில் இருந்து 54.7 சதவீதமாக குறைந்துள்ளது. குழந்தைக்கு தொடர்ந்து 6 மாதம் வரை தாய்ப் பால் மட்டுமே கொடுப்பது 34.1 சதவீதத்தில் இருந்து 48.3 சதவீத மாக அதிகரித்துள்ளது. குழந் தைக்கு 6 மாதம் முதல் 23 மாதம் வரை தாய்ப்பாலுடன் திட உணவு கொடுப்பது 81.2 சதவீதத்தில் இருந்து 67.5 சதவீதமாக குறைந் துள்ளது.

எச்ஐவி/எய்ட்ஸ்

எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த விழிப் புணர்வு பெண்களிடம் 12.3 சத வீதத்தில் இருந்து 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஆண்களிடம் 37.4 சதவீதத்தில் இருந்து 10.9 சதவீதமாக குறைந்துள்ளது.

வன்முறை

திருமணத்துக்கு பிறகு பெண்கள் குடும்பத்தை நிர்வகிப்பது 87.4 சதவீதத்தில் இருந்து 84 சதவீதமாக குறைந்துள்ளது. கணவரால் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் 41.9 சதவீதத்தில் இருந்து 40.6 சதவீதமாக குறைந்திருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு எதிரான வன்முறை 6.2 சதவீதமாக உள் ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in