தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரிப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

தமிழக பொது சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சி, மத்திய அரசின் செய்தி தகவல் அமைப்பு, உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவை இணைந்து நடத்திய கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. அதையொட்டி காய்கறி சந்தை அருகில் கரோனா தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அணிவகுத்து நின்ற  தன்னார்வலர்கள்.படம்: பு.க.பிரவீன்
தமிழக பொது சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சி, மத்திய அரசின் செய்தி தகவல் அமைப்பு, உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவை இணைந்து நடத்திய கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. அதையொட்டி காய்கறி சந்தை அருகில் கரோனா தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அணிவகுத்து நின்ற தன்னார்வலர்கள்.படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

தஞ்சை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை திருவான்மியூரில் கரோனா தொற்று விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தகவல் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் அண்ணாதுரை, தமிழ்நாடு-கேரளா யுனிசெப்அலுவலர் சுகதா ராய், சமூக கொள்கைகள் குழந்தைகள் நல வல்லுநர் கெசிக் அலி, உலக சுகாதார நிறுவன அதிகாரி அருண்குமார், பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னையில் 10 வாகனங்கள் மூலம் மார்க்கெட், குடிசைப்பகுதிகளில் கரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தடுப்பூசிக்கான உலகளாவிய ஒப்பந்தம், செங்கல்பட்டு தடுப்பூசிஉற்பத்தி மையம் திறப்பு உள்ளிட்டவைகள் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகாலஅதிமுக ஆட்சியில், எச்எல்எல் நிறுவனத்தை திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதிமுக அரசைக்காட்டிலும், திமுக அரசு அதிக அளவிலான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை திறப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது.

தஞ்சை, கள்ளக்குறிச்சி, கடலூர்உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்றுஅதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகமாகி வரும் மாவட்டங்களில் தளர்வுகள் குறித்தும், என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தப்படும்.

தமிழகத்துக்கு இதுவரை வந்த1.56 கோடி தடுப்பூசிகளில், 1.48கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது 8 லட்சம் தடுப்பூசிகள்கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in