Published : 03 Jul 2021 03:11 AM
Last Updated : 03 Jul 2021 03:11 AM

ஐஆர்சிடிசி சார்பில் ஆக.3-ல் காசிக்கு ஆன்மிக ரயில் சுற்றுலா

சென்னை

ஐஆர்சிடிசி சார்பில் காசிக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி ஆன்மிக சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகின்றன. அதன்படி, சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த ஐஆர்சிடிசி சுற்றுலா ரயில்கள் மீண்டும் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக, புண்ணியத் தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, வரும் ஆடிஅமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் இந்த ஆன்மிக சிறப்பு ரயில், திண்டுக்கல், திருச்சி,கும்பகோணம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாககாசிக்குச் செல்கிறது. காசி கங்கையில் நீராடி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம், கயாவில் ஆடி அமாவாசையன்று சிறப்பு தர்ப்பணம் செய்தல் மற்றும் பல்வேறு ஆன்மிக இடங்களை காணஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 11 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ.10,395. உணவு, தங்குமிடம், ரயி்ல் போக்குவரத்து உள்ளிட்டவை இதில் அடங்கும். முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் தகவலுக்கு 9003140680, 9840948484 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x