

தமிழகம் முழுவதும் நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல்செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த சுனில்சேட் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்களில் தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்பும்வரை தற்போது பணியில் உள்ள தலைவர்கள், உறுப்பினர்கள் பிற பணிகளையும் கவனிக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது. ‘‘இந்த காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கான தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்புக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்த நீதிபதிகள், நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப எடுத்தநடவடிக்கை குறித்து தமிழக அரசு3 வாரங்களில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைதள்ளிவைத்துள்ளனர்.