Published : 03 Jul 2021 03:13 AM
Last Updated : 03 Jul 2021 03:13 AM

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் பழைய கட்டணத்தையே செலுத்த நிர்வாகம் வற்புறுத்தல்: மாணவர்கள் கவலை

விருத்தாசலம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத் துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி அரசாணை வெளியிட்டும் அதற்கான கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. இதனால் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த கட்டணத்தை செலுத்தகல்லூரி நிர்வாகம் வற்புறுத்து வதாக மருத்துவ மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சிதம்பரத்தில் உள்ள ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரிஅண்ணாமலை பல்கலைக்கழகத் தின் கீழ் இயங்கி வருகிறது. இக்கல்லூரி மாணவர்கள் , தங்களிடம் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ண யிக்கப்பட்டுள்ள குறைந்த கல்விக் கட்டணத்தையே வசூலிக்க கோரியும் கடந்த 2020 டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து 50 நாட்கள் போராட்டம் நடத்தினர். இதன் பிறகு, அரசு கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சில நிபந்தனைகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக கருதும் வகையில் அந்த கல்லூரியை தமிழக சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்க ஆணையிடப்படும்.அந்த கல்லூரியுடன் தொடர்புடைய ராணி மெய்யம்மை நர்ஸிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் சுகாதாரத் துறை யிடம் ஒப்படைக்கப்படும். அந்த கல்லூரிகள் அமைந்துள்ள 113.21 ஏக்கர் நிலம் அரசிடம் ஒப்படைக்கப்படுவதன் மூலம், அதில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளும் சுகாதாரத் துறை வசம் ஒப்படைக்கப்படும்.

இதற்குரிய இழப்பீட்டுத் தொகை,அண்ணாமலை பல்கலைக்கழகத் துக்கு வழங்கப்படும் கூடுதல்மானிய உதவிகளில் ஈடுசெய்யப் படும். நிதித் துறையின் ஒப்புதல் பெற்று பணியாளர்கள் நிலவரம், இடங்களை நிரப்புவது மற்றும் கல்விக் கட்டணம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைப்பு அங்கீகாரம் ஆகியவை தொடர்பாக சுகாதாரத் துறை மூலமாக தனி அரசாணை வெளியிடப்படும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு வகுப்புகளுக்குத் திரும்பினர்.

இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டுக்கான கட்டணம் தொடர் பாக மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு சென்று கேட்டனர். அப்போது, அரசு நிர்ணயித்த கட்டணம் குறித்த எந்த அறிவிப்பாணையும் இல்லை. எனவே கடந்த கால நடைமுறைப்படி கட்டணத்தை செலுத்துங்கள் என கல்லூரி நிர்வாகம் கூறியதாக மாணவர்கள்தெரிவித்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது, "கட்டணம் தொடர்பாக இதுவரை எந்த வித ஆணையோ வழிகாட்டுதலோ பிறப்பிக்கப்படவில்லை. எனவே பழைய கட்டணத்தை செலுத்த கூறியிருக்கிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x