Published : 18 Feb 2016 09:38 AM
Last Updated : 18 Feb 2016 09:38 AM

மக்கள் நலக் கூட்டணிக்கு நடுநிலையாளர்களிடம் வரவேற்பு: வைகோ

மக்கள் நலக் கூட்டணிக்கு நடு நிலையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சிவகாசியில் நேற்று நடைபெற்ற கட்சி நிர் வாகி இல்ல நிகழ்ச்சி யில் பங்கேற்க வந்த வைகோ செய்தி யாளர்களிடம் கூறிய தாவது: சட்டப்பேர வைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மிகப் பெரிய வெற்றிபெறும். நேர்மை யான, ஊழலற்ற, மதுவை முற்றாக ஒழிக்கின்ற அரசை அமைப் போம். ஒவ்வொரு நாளும் எங்க ளுக்கு ஆதரவு பெருகி வருகி றது. கட்சிகள் சார்பில்லாத நடு நிலையாளர்களிடம் எங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதை கட்டமைத்துக் கொண்டு செல்கிறோம். நாங்கள் திட்டமிட்டு பணியாற்றுகிறோம். மக்களிடம் நல்லாதரவு இருப்பதை நேரடி யாக பார்ப்பதால் நம்பிக்கை யோடு இருக்கிறோம். மக்கள் நலக்கூட்டணியில் உள்ள தலைவர் கள் சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் இருக்கிறோம். எங்கள் அணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் கவலைப்படத் தேவையில்லை. அவரது நிலை பரிதாபமாக உள்ளது. வரும் தேர்த லில் அவருக்கு சீட் கிடைக்குமா என்று பார்த்துக் கொள்ளட்டும் என்றார்.

அவிநாசி - அத்திக்கடவு

அவிநாசி- அத்திக்கடவுத் திட்டத்தை அரசிதழில் வெளி யிட்டு, நிதி ஒதுக்கக் கோரி அவிநாசியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 60-க்கும் மேற்பட்டோரை நேற்று மாலை சந்தித்த பிறகு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியது:

2001-16ம் ஆண்டு வரை மட்டும், பவானி ஆற்றில் வரும், உபரி நீர் 42,252 கனஅடி தண்ணீர் வீணாகியுள்ளது. உபரிநீரைப் பயன்படுத்தினால், இப்பகுதியின் நிலத்தடி நீர் வளம்பெறும். 2002-2003 மற்றும் 2012-2013ம் ஆண்டு அதிமுக அரசு நிதி நிலை அறிக்கையிலேயே அறி வித்தது. அப்போது, மத்திய அரசு சில ஆட்சேபனைகளைத் தெரி வித்தது. அதற்கு, எந்த பதிலும், விளக்கமும் அப்போது வழங்க வில்லை.

நேற்றைய நிதிநிலை அறிக் கையில் புதிய கருத்துரு அனுப் பப்படும் என நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறார். அதில் என்ன புதிர்? எந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டப் பணிகளைத் தொடங்குகிறீர்கள். அதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?

தமிழக அரசு பொறுப்பிலே இருந்தவர்கள் கடமை தவறிவிட் டார்கள். ஈரோட்டில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கெயில் மற்றும் அவிநாசி - அத்திக் கடவு திட்டத்தை முக்கிய பிரச் சினையாக எடுப்போம். விவசாயி கள் போராட்டத்துக்கு மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஆதரவு தரு வோம். இப்பிரச்சினையை மக்கள் நலக் கூட்டணியின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் சேர்த்துள் ளோம். துணை முதல்வராக ஸ்டாலின் இருந்த போது, இத்திட்டம் பற்றி பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.68 கோடி ஊழல்

பழநியில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: தமிழகத்தை மாறி, மாறி ஆட்சிசெய்த திமுக, அதிமுக கட்சிகளின் பிடியில் இருந்து விடுபட மக்கள் நலக்கூட்டணியை ஆதரிக்க மக்கள் தயாராகிவிட்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68- வது பிறந்தநாளை முன்னிட்டு, 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில், மரக்கன்று வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. இரண்டு ரூபாய்க்கு கிடைக்கும் மரக்கன்றை, நூறு ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு காட்டி, ரூ. 68 கோடி ஊழல் செய்துள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x