இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்சினை: உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்சினை: உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

அரசு இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக தாமதம் ஏற்படுவதால் பொதுமக் கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 225 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 20 மையங்களும், கிராம ஊராட்சிகளில் வேளாண் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங் கள் மூலம் 152 மையங்களும், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் 25 மையங்களும், கிராமப் புற தொழில் முனைவோர் மூலம் 28 மையங்களும் இயங்கி வரு கின்றன.

இவற்றின் மூலம் பொதுமக்க ளுக்கு சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சிறு- குறு விவசாயி சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்தல் என பல்வேறு சேவைகள் வழங்கப் படுகின்றன.

இந்த சேவைகளை பெறுவதற் காக தினமும் இ-சேவை மையங் களுக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். ஆனால், சர்வர் பிரச்சினை காரணமாக சேவை களை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், மின் தடை நேரங்களில் பெரும்பாலான இ-சேவை மையங்கள் செயல் படுவ தில்லை என்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சிவ சூரியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் வினோத் மணி ஆகியோர் கூறியது:

அரசின் இ-சேவை மையங் களில் சர்வர் பிரச்சினை காரணமாக ஒவ்வொரு சேவைக்கும் அதிக நேரம் ஆவதால், வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதேபோல, மின் தடை நேரங் களில் பெரும்பாலான இ-சேவை மையங்கள் செயல்படுவதில்லை. இதனால், மக்கள் அலைக் கழிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, இவற்றை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இ-சேவை மையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட மின் ஆளுமை சங்க அலுவலர்கள் கூறியது: இ-சேவை மையங்க ளுக்கு தடையற்ற மின்சார வசதியை அந்தந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். சர்வர் பிரச்சினை மற்றும் மின் தடை நேரங்களில் இ-சேவை மையங் களில் சேவை பாதிக்கப்படுவது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in