

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழ கிரியின் கருத்துகளை அலட்சியப் படுத்துமாறு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பால் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 13-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து திமுக - காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ‘‘திமுகவுக்கும், காங் கிரஸுக்கும் கொள்கையே கிடை யாது. வரும் தேர்தலில் திமுக தோற்பது உறுதி. மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் ஒரு நகைச் சுவை பயணம்’’ என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இது திமுகவினரிடையே பர பரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அழகிரியின் இதுபோன்ற கருத்துகள் திமுகவை பலவீனப்படுத்தும் என ஸ்டாலின் உள்ளிட்டோர் கருணாநிதியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கருணாநிதி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக் கையில், ‘‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, கட்சியின் வளர்ச்சி யைக் கெடுக்கவும், எழுச்சியைக் குலைக்கவும் திட்டமிட்டு பேட்டி அளித்து வருகிறார். அவருக்கும் திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ‘‘திமுக காங்கிரஸுக்கு கொள்கை இல்லை. அதிமுகவை எந்தக் கூட்டணியாலும் வெல்ல முடி யாது’’ என அவர் பேட்டி அளித்திருப் பது ஏற்கத்தக்கதல்ல. அவர் செய்து வரும் துரோகத்துக்கு என் பெயரைப் பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது. திமுகவினர் யாரும் அவரது கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை. அவரையும், அவ ரது பேச்சுக் களையும் அலட்சியப் படுத்த வேண்டும்’’ என தெரிவித்து உள்ளார்.